என் மலர்
செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து சொல்ல குவிந்த மக்கள் கூட்டம்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து சொல்ல மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் வரிசையில் அனுப்பினார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கவர்னர் வித்யாசாகர்ராவ் யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தினமும் ஆதரவு அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், மதுசூதனன், நத்தம்விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் தினமும் பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் நேற்று இரவு வரை மொத்தம் 11 எம்.பி.க்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் பெரும்பாலான தொண்டர்களும், பொதுமக்களும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்தும் தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு மேலும் கூட்டம் அதிகரித்தது. அனைவரும் ஒரே இடத்தில் திரண்டதால் போலீசாருக்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு தடுப்பு அமைத்து தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களை வரிசையில் அனுப்பி வைத்து வருகிறார்கள். அவர்களை ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொருவராக சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
சில தொண்டர்கள் கை கூப்பி வணங்கியும், கை கொடுத்தும் வாழ்த்துகிறார்கள். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் புன்சிரிப்புடன் கை கூப்பி வணங்கியும், கைகொடுத்தும் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
தொண்டர்களை சந்தித்த பின்பு ஓ.பன்னீர்செல்வம் பகல் 1 மணிக்கு தலைமைச் செயலகம் புறப்பட்டார். ஒரு வாரத்துக்குப் பின்பு அவர் தலைமைச் செயலகம் செல்வதால் தொண்டர்கள் இரு புறமும் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தார்கள்.

Next Story