என் மலர்

  செய்திகள்

  தமிழக அரசியல் குழப்பம் டெலிவி‌ஷன் தொடரை விட பெரிய தொடராக உள்ளது: கனிமொழி எம்.பி. கருத்து
  X

  தமிழக அரசியல் குழப்பம் டெலிவி‌ஷன் தொடரை விட பெரிய தொடராக உள்ளது: கனிமொழி எம்.பி. கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசியல் குழப்பம் டெலிவி‌ஷன் தொடரை விட பெரிய தொடராக உள்ளது கனிமொழி எம்.பி. கருத்து

  சென்னை:

  தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மதுரையில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

  இன்று தமிழகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வில்லை. இந்த சூழலில் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பது பெரிய வி‌ஷயம். இந்த நிலைமையில் நான் இங்கேதான் வேலை செய்வேன். அங்கேதான் வேலை செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

  பல பேருக்கு வெளியூரில் வேலை கிடைத்தால் தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஆசை இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த உலகத்தை புரிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு தொலைக்காட்சி பார்ப்பதை விட்டு விட்டு வந்ததே பெரிய வி‌ஷயம். ஏனென்றால் டி.வி. சீரியலை விட பெரிய சீரியலாக தமிழ்நாட்டு அரசியல் இப்போது ஒடிக் கொண்டிருக்கிறது.

  இந்த குழப்பம் எல்லாம் நீங்குவது உங்கள் கைகளில் இருக்கிறது. நாளைய தமிழகத்தை பொருளாதார வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வது நீங்கள்தான். தமிழகத்தில் மாற்றத்தை உண்டாக்கப் போவது நீங்கள்தான்.

  மத்திய அரசையே நம்பக்கம் திருப்பி கேட்க வைத்தவர்கள் இளைஞர்கள், மாணவர்கள். இனியும் இந்தியாவை தமிழகத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைக்க உங்களால்தான் முடியும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×