என் மலர்

  செய்திகள்

  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்கள் விருப்பப்படி முடிவு எடுக்க வேண்டும்: ஈஸ்வரன் கருத்து
  X

  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்கள் விருப்பப்படி முடிவு எடுக்க வேண்டும்: ஈஸ்வரன் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்கள் விருப்பப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  வாக்களித்து தங்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாக்காளர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக யாருக்காவது ஆதரவை அளித்து விடக்கூடாது.

  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடைய மறைவுக்கு பின் அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சி தலைமையின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

  ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வாக்களித்த மக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

  நேற்றுவரை சசிகலாவுக்கு ஆதரவளித்து முன்னிலை வகித்து சென்று கொண்டிருந்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இன்றைக்கு தன் நிலையை மாற்றிக் கொண்டு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

  அவர் செய்தியாளர்களிடம் பேசியதை பார்க்கும் போது தொலைபேசிகளிலும், சமூக வலைதளங்களிலும், அவர் தொகுதியில் வாக்களித்தவர்களும், அவருடைய ஆதரவாளர்களும் கொடுத்த அழுத்தத்தினால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

  இந்த ஒருவார காலமாக அவருடைய செயல்பாடுகளை வாக்களித்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்துவிட்டார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

  ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

  அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மக்களுடைய விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாற்றி முடிவெடுத்தால் அவர்கள் சொந்த தொகுதிக்குள் செல்ல முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

  நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் பரபரப்புகளை ஒருபெரிய எதிர்பார்ப்போடு மக்கள் பார்க்கிறார்கள். மொத்த தமிழக மக்களும் ஒரே மாதிரியான முடிவுகளை எடுத்து எதிர்ப்பை காட்டினால் தமிழகத்தில் இதுவரை யாரும் கண்டிராத மாபெரும் புரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×