search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்க்கரை மானியம் ரத்து ஏழை மக்களை பாதிக்கும்: திருநாவுக்கரசர்
    X

    சர்க்கரை மானியம் ரத்து ஏழை மக்களை பாதிக்கும்: திருநாவுக்கரசர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சர்க்கரை மானியம் ரத்து ஏழை மக்களை பாதிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான முயற்சிகளை பா.ஜனதா அரசு மேற்கொள்ளாதது கண்டனத்துக்குரியது.

    வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் நிதி மிகவும் குறைவு. பேரிடர் மேலாண்மையில் மத்திய-மாநில அரசுகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

    பொது விநியோக திட்டத்தின் மூலம் ஒரு கிலோ சர்க்கரை ரூ 13.50க்கு விற்கப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் அரசு மானியமாக மாநிலங்களுக்கு ரூ 18.50 வழங்கியது. இதனால் சுமார் 40 கோடி குடும்பங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் பா.ஜனதா அரசு மானியங்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

    அதன் விளைவுதான் சர்க்கரை மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் மண் எண்ணெய்க்கு மாதந்தோறும் 10 பைசா விலை உயர்த்தி வருகிறது. இத்தகைய மக்கள் விரோத போக்கை பா.ஜனதா அரசு கைவிட வேண்டும்.

    எண்ணூர் கடலில் பரவி உள்ள எண்ணெய் படிமத்தை அகற்றுவதற்கு உரிய தொழில் நுட்பத்தை கப்பல் போக்குவரத்து துரை ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

    மருத்துவ பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் நீட் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றிய முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். நீட் விவகாரத்தில், தமிழக அரசின சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு துணை நிற்கவேண்டும். குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூரில் கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவை அரசு துரிதமாக சரி செய்ய வேண்டும்.

    பேட்டியின் போது பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, சிரஞ்சீவி, பலராமன், ரூபிமனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×