என் மலர்
செய்திகள்

மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
மயிலாப்பூர் காவல்துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களில் கூறியதற்கும் முதல்வர் அளித்த விளக்கத்திற்கும் முரண்பாடு உள்ளது என்றார்.
மேலும், காவல்துறை அதிகாரி சீருடையில் எப்படி ஊடகங்களில் பங்கேற்கலாம்? என்று கேள்வி எழுப்பியதுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மெரினாவில் காவல்துறை அமல்படுத்தி உள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘மு.க.ஸ்டாலின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என உறுதி அளித்தார்.

Next Story