என் மலர்

  செய்திகள்

  பனிச்சரிவில் பலியான தமிழக ராணுவ வீரர்கள் 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
  X

  பனிச்சரிவில் பலியான தமிழக ராணுவ வீரர்கள் 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் பலியான தமிழக ராணுவ வீரர்கள் 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  சென்னை,ஜன.28-

  முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காஷ்மீர் மாநிலம், பந்திபுர் குரேஷ் பள்ளத்தாக்கில் 26.1.2017 அன்று ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிழக்கு கண்ணந்தங்குடி கிராமத் தைச் சேர்ந்த, சிப்பாய் இளவரசன் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், பல்லக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிப்பாய் சுந்தரபாண்டி ஆகிய இருவரும் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் இளவரசன் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மறைந்த முதல்-அமைச்சர் பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணை தொகையை 10 லட்சத்தி லிருந்து 20 லட் சமாக உயர்த்தி வழங்கப்படும் என 2.9.2016 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் இறந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் உடன டியாக வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.

  இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

  Next Story
  ×