search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தூர்வாரும் பணி நடந்த இடத்தை பார்வையிட்ட காட்சி.
    X
    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தூர்வாரும் பணி நடந்த இடத்தை பார்வையிட்ட காட்சி.

    ஏழை, எளிய மக்களுக்கு புத்தாண்டு வளர்ச்சி ஆண்டாக அமையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாண்டு வளர்ச்சி ஆண்டாக அமையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்ற சுப்பிரமணியபுரம் என்ற இடத்தை இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆறு மூலம் லட்சக்கணக்கான பேருக்கு குடிநீரும், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றன.

    தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி தடுப்பணையில் தூர்வாரும் பணி என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

    இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறு அருகே 30 அடி ஆழம் வரை மணல் அள்ளி உள்ளனர். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு சட்ட மீறல்கள் நடந்துள்ளது.

    இதை தடுக்க பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன்? என தெரியவில்லை. சேகர்ரெட்டி போன்றோருக்கு தூர்வாரும் பணியை கொடுத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் அளிக்க கூடிய திட்டம் தற்போது அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. இனி வரும் காலங்களில் சேகர் ரெட்டி போன்றவர்களுக்கோ, பினாமி பெயரிலோ தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தத்தை கொடுக்க கூடாது. தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரூ.500, 1000-ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பில்லை. மாறாக வருகிற புத்தாண்டு ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான ஆண்டாக அமையும். தேசிய நதிநீர் திட்டத்தில் தாமிரபரணி ஆறு உள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×