என் மலர்

  செய்திகள்

  மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
  X

  மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதல்முறையாக மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கான பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
  சென்னை:

  அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.

  இது தொடர்பாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

  அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

  செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.

  செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

  இன்றைய கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.

  கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

  எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா 7 முறை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். இந்தமுறை அவர் இல்லாமலே பொதுக்குழு, செயற்குழு முதல்முறையாக கூடுவது, குறிப்பிடத்தக்கது.

  இதையொட்டி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பையும் மீறி, ஜெயலலிதாவின் மறைவு தேற்றமுடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், காலை 7 மணியில் இருந்தே வானகரம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வாகனங்களில் வந்தவண்ணம் உள்ளனர்.

  காலை 9 மணியளவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். இன்றைய கூட்டத்துக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை ஏற்கிறார்.

  மண்டபத்தின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த சோதனைகளுக்கு பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  Next Story
  ×