என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் ஓ.எஸ். மணியன் இலவச வேட்டி-சேலை தயாரிப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  X
  அமைச்சர் ஓ.எஸ். மணியன் இலவச வேட்டி-சேலை தயாரிப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இலவச வேட்டி-சேலைகள் தயாரிப்பு பணிமுடியும் நிலையில் உள்ளது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்க இலவச வேட்டி-சேலைகள் தயாரிப்பு பணிமுடியும் நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
  ஈரோடு:

  தமிழக கைத்தறிதுறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஈரோடு வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலை தயாரிப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் துணிநூல் இயக்குனர் முனியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:-

  பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் ஏழை- எளியவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 112 விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

  தற்போது இப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு பயனாளிகளுக்கு வழங்க ஏதுவாக கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியிலும் தமிழகம் “நம்பர் ஒன்”னாக திகழ்கிறது.

  மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ஆண்டு தோறும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
  Next Story
  ×