என் மலர்

  செய்திகள்

  கவர்னர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு
  X

  கவர்னர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமமோகன ராவ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து நான் தான் தலைமைச் செயலாளர் என கூறினார். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  சென்னை

  முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது  மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தீரன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

  இதனையடுத்து மிகவும் ஆக்ரோஷமாக பேட்டி அளிக்க தொடங்கிய அவர், இன்னமும் நான் தான் தலைமைச் செயலாளர் என பேட்டியளித்தார். இது தமிழக அதிகாரிகளிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், தற்போது தமிழக தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  Next Story
  ×