என் மலர்

  செய்திகள்

  திண்டிவனத்தில் 30-ந் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
  X

  திண்டிவனத்தில் 30-ந் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது. திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் நடைபெறவிருக்கிறது.
  சென்னை:

  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

  பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, ‘2016-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017-ம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் வரும் 30-ந் தேதி நடைபெறவுள்ளது. திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார்.

  கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். பா.ம.க.வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இப்பொதுக்குழு கூட்டத்தில் பாராட்டு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×