என் மலர்

  செய்திகள்

  பொருளாதார கொள்கையில் மாற்றம் வராமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது: சீமான்
  X

  பொருளாதார கொள்கையில் மாற்றம் வராமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது: சீமான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொருளாதார கொள்கையில் மாற்றம் வராமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என சீமான் கூறினார்.

  மன்னார்குடி:

  சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்து இறந்தார். இலங்கையில் தமிழர்களின் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து உயிர்துறந்த அப்துல்ரவூப் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக வீரவணக்க பொதுக்கூட்டம், படத்திறப்பு நிகழ்ச்சி மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

  இதில் மாநில நிர்வாகிள் மணி செந்தில், வக்கீல் நல்லதுரை, சந்திரசேகர், விக்னேஷ் தாய் செண்பகலெட்சுமி, தந்தை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்கலந்து கொண்டு விக்னேஷ் படத்தினை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

  காவிரி நதி நீர் தமிழர்களின் உரிமை என்று உடலை தீயிட்டு கொளுத்தி உயிர் தியாகம் செய்தார் விக்னேஷ்.

  இதுபோல் பல்வேறு உரிமைகளுக்காக அப்துல்ரவூப் உள்ளிட்ட பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நாம் தமிழர் இயக்கத்தினர் தற்கொலைகளை ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல. விக்னேஷ் எந்த கோரிக்கைக்காக உயிர் தியாகம் செய்தாரோ அந்த உரிமையை இந்த இயக்கம் பெற்றுத்தரும்.

  ரூ.500, 1000 செல்லாது என அறிவித்தால் கருப்பு பணம் ஒழிந்து விடும் என்றார் மோடி. ஆனால் சேகர் ரெட்டி, ஜனார்த்தன ரெட்டியிடம் பல 100 கோடி ரூபாய் பணம் கிடைத்தது எப்படி?

  பொருளாதார கொள்கையில் மாற்றம் வராமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி பெரும் மாற்றத்தை கொண்டுவரும். அதற்கான காலம் வெகு விரைவில் வரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×