என் மலர்

  செய்திகள்

  மருத்துவப்படிப்புக்கு நடைமுறையில் உள்ள தேர்வு முறையே தொடர வேண்டும்: ஜி.கே.வாசன்
  X

  மருத்துவப்படிப்புக்கு நடைமுறையில் உள்ள தேர்வு முறையே தொடர வேண்டும்: ஜி.கே.வாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவப்படிப்புக்கு நடைமுறையில் உள்ள தேர்வு முறையே தொடர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
  சென்னை:

  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 15 சதவீதத்தையும், மருத்துவ முதுநிலைப்படிப்பிற்கு 50 சதவீதத்தையும் பொது தொகுப்புக்கு கொண்டு சென்று, தற்போது நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முறையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித்தாள்கள் அமைந்துள்ளன.

  பல்வேறு வகையிலான பாடத்திட்டங்கள் கொண்டுள்ள நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வு முறையை நடத்தினால் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவதில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டே பல்வேறு மாநிலங்கள் இந்த தேர்வு முறையை எதிர்க்கிறது.

  குறிப்பாக தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கு மத்திய அரசு 15 சதவீதம் இட ஒதுக்கீடு செய்கிறது. இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் தமிழக மாணவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு முழுமை அடையாமல் வெளிமாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையினையே வரும் கல்வி ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என்பதற்காக தமிழக அரசும், அனைத்து தமிழக எம்.பி.களும் நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×