search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் சேர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு: திருநாவுக்கரசர்
    X

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் சேர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு: திருநாவுக்கரசர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரலாற்றில் இல்லாத சம்பவமாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன என சு.திருநாவுக்கரசர் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், விஜயதாரணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ள நிலையில், வங்கிகளில் 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளும் இருப்பு இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ராகுல்காந்தி தான்.

    தற்போது பாராளுமன்ற வரலாற்றில் இல்லாத சம்பவம் நடைபெற்று உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து காங்கிரசை ஆதரித்துள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில் இதே போன்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    காமராஜரின் தயவால், காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் முதல் 1½ கோடி ரூபாய் வரை கல்வி மற்றும் மருத்துவத்திற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இந்த விழாவுக்கு ராகுல்காந்தி வருவதற்கு சம்மதித்து இருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குஷ்பு பேசியதாவது:-

    இந்தியாவில், மோடி மீதான மாற்றம், ஏமாற்றமாக திரும்பி அத்தனை பேருக்கும் காங்கிரஸ் மீது நம்பிக்கை வந்து உள்ளது. ‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ என்று கூறிவிட்டு மோடி ஏழைகளை அவதிப்பட வைத்துள்ளார். இதுவரை 70 பேர் வங்கிகளில் வரிசையில் நின்று இறந்திருக்கிறார்கள். மக்களின் அவதிக்கு பா.ஜனதா காரணம் என்பதால் காங்கிரசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. 2019-ல் ராகுல்காந்தி பிரதமராக வருவார். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×