என் மலர்

  செய்திகள்

  புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் கனிமொழி எம்.பி.பேட்டி
  X

  புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் கனிமொழி எம்.பி.பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கனிமொழி எம்.பி.பேட்டியில் கூறியுள்ளார்.

  சென்னை:

  புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. ஐந்தர் மந்திரில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

  இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங், டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சியோடியா, தி.மு.க எம்.பி கனிமொழி, மற்றும் திராவிடர் கழகம் , ஆதித்தமிழர் பேரவை, சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

  புதிய கல்வி கொள்கை நாட்டை பிளவு படுத்தும் வகையில் சித்தாந்தத்தை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவகல்வியை கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் முற்காலத்து கல்வி முறையை கொண்டுவர முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. அது ஆபத்தானது. தி.மு.கழகம் இதனை ஒரு போதும் ஏற்காது கடுமையாக எதிர்க்கும்.

  இவ்வாறு கனிமொழி கூறினார்.

  Next Story
  ×