search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களை மட்டுமே பா.ஐனதா நம்புகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
    X

    வாக்காளர்களை மட்டுமே பா.ஐனதா நம்புகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

    வாக்காளர்களை மட்டுமே பா.ஐனதா நம்புகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் தொம்பன்குடிசை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. யாரையும் நம்பவில்லை. வாக்காளர்களை மட்டும் தான் நம்பி நிற்கிறோம்.

    கருப்பு பணத்தை ஒழித்தவர் பிரதமர் மோடி. கருப்பு பணத்தை ஒழித்த காரணத்தால் அதை எதிர்த்து ஒரு கூட்டணியே உருவாகியுள்ளது என்று நிறைய பேர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் பா.ஜ.க.விடம் தான் மிகப்பெரிய கூட்டணி உள்ளது என்றேன். ஆம் கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் பா.ஜ.க. பக்கம் இருக்கின்றனர். இதை விட மிகப்பெரிய கூட்டணி ஒன்றும் தேவையில்லை.

    ஸ்டாலின் பேசும் போது மக்களின் கடுகு டப்பாவில் இருக்கும் பணத்தை எடுத்த மோடி கன்டெய்னர் லாரியில் உள்ள பணத்தை எப்படி எடுக்க போகிறார் என்று கேட்கிறார். அந்த பணம் கடுகு டப்பாவில் இருந்தாலும், கன்டெய்னர் லாரியில் இருந்தாலும் செல்லாது என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். மோடி எடுத்த அதிரடியால் கன்டெய்னர் லாரியில் இருக்கும் பணம் இன்று சாதாரண மக்கள் வீட்டு கடுகு டப்பாவிற்கும் வரப்போகிறது.

    மேலும் ஸ்டாலின் தமிழக மக்களை பிச்சைகாரர்கள் போல் வரிசையில் மோடி நிற்க வைத்து விட்டார் என்கிறார். இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கியது யார்? இன்று வங்கிகளில் வரிசையாக நின்றாலும் தாங்கள் சம்பாதித்த பணத்தை செலுத்தவும், அதை எடுக்கவும் தான் வரிசையில் நிற்கின்றனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். பாரதீய ஜனதா கட்சியினருக்கு பணத்தை பதுக்கவும் தெரியாது, ஒழித்து வைக்கவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அதை பா.ஜ.க.வினர் செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×