என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி

    தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆலந்தூர்:

    தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன், கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அதன்பிறகு சென்னை வந்தார்.

    இன்று மாலை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    இதற்காக சென்னை கோட்டூர்புரம் வீட்டில் இருந்து அவர் காலை 10 மணி அளவில் கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார்.

    அங்கு திருச்சி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்குள் காத்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. மயக்கம் வருவதுபோல் உணர்ந்தார்

    உடனடியாக அங்கிருந்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விமான பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

    அதன்பிறகு துரை முருகனை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பயப்படும்படி எதுவும் இல்லை. சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×