என் மலர்

  செய்திகள்

  காவிரி பிரச்சனைக்கு மத்தியஅரசு விரைவில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
  X

  காவிரி பிரச்சனைக்கு மத்தியஅரசு விரைவில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி பிரச்சினைக்கு மத்தியஅரசு விரைவில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா உலக ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் பள்ளி மாணவர்களிடம் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார்.

  தொடர்ந்து நிருபர்களிடம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில், கடந்த 2008-ம் ஆண்டு மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதற்காக திருமங்கலம் பார்முலா என்ற திட்டத்தை உருவாக்கி மதுரை மாவட்டத்தையும், தமிழகத்தையும் தலைகுனிய வைத்த தி.மு.க.வின் கொள்கைக்கு மாறாக, இந்த தேர்தலில் பா.ஜ.க. செயல்படும்.

  தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க.வினர் எந்த காரணத்துக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள இளைஞர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும்.

  காவிரி தண்ணீர் பிரச்சனை 40 ஆண்டு கால பிரச்சனை. இதற்கு நிரந்தரமான தீர்வை மத்திய அரசு விரைவில் ஏற்படுத்தி தரும். தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க மத்திய அரசு முழுமையாக பாடுபட்டு வருகிறது.

  தூத்துக்குடி வெளி துறைமுகத்துக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று சில இடங்களில் பேசப்படுகின்றன. இது முற்றிலும் வதந்தி. தூத்துக்குடியில் வெளி துறைமுகத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×