என் மலர்

  செய்திகள்

  3 தொகுதிகளில் நடக்கவுள்ள தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9-ந் தேதி துணை ராணுவம் வருகிறது: ராஜேஷ் லக்கானி தகவல்
  X

  3 தொகுதிகளில் நடக்கவுள்ள தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9-ந் தேதி துணை ராணுவம் வருகிறது: ராஜேஷ் லக்கானி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  3 தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9-ந் தேதி துணை ராணுவம் வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
  சென்னை:

  3 தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9-ந் தேதி துணை ராணுவம் வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு 19-ந் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் உள்ள சுமார் 800 வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு தேர்தல் பணி குறித்து மூன்றுகட்ட பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்ட பயிற்சி 1-ந் தேதி (இன்று) நடக்கவுள்ளது.

  26-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றே தொகுதிக்கு தலா ஒரு செலவீனப் பார்வையாளர் வந்துவிட்டனர். இனிமேல் பொதுப் பார்வையாளர்கள் வருவார்கள். இவர்கள் 3-ந் தேதியன்று வருவார்கள். சில நாட்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் போலீஸ் பார்வையாளராக வரவுள்ளனர்.

  5-ந் தேதியன்று, வேட்பாளர் இறுதிப்பட்டியல் பற்றி தெரியவரும். அதன்பிறகு தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் படம், பெயர், சின்னம் ஒட்டும்பணி 7-ந் தேதி தொடங்கும்.

  3 தொகுதிக்கும் தலா 4 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பே அவர்கள் வருவார்கள்.

  தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கையெழுத்து போடுவதற்கு பதிலாக பெருவிரல் ரேகை பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அந்த படிவங்கள் கொடுக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான். எந்த பிரச்சினையும் அதில் இல்லை.

  31-ந் தேதி வரை அந்த தொகுதிகளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை (2-ந் தேதி) மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடியும். 3-ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 5-ந் தேதி வரை வேட்புமனு வாபஸ் பெற வாய்ப்பு தரப்படும்,

  5-ந் தேதி மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளருக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். 
  Next Story
  ×