என் மலர்
செய்திகள்

3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும்: மதுரையில் திருநாவுக்கரசர் பேட்டி
தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் என திருநாவுக்கரசர் கூறினார்.
அவனியாபுரம்:
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் நடக்கும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதியில் விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்படும்.
காங்கிரஸ் கட்சியின் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு குறித்த பட்டியல் நாளை வெளியிடப்படும். இவர்கள் தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார்கள். 3 தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விமானத்தில் திருநாவுக்கரசருடன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் வந்தார். இருவரும் விமானத்தில் சிறிதுநேரம் பேசினர்.
Next Story






