என் மலர்
செய்திகள்

மு.க.ஸ்டாலின் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் பேட்டி
மு.க.ஸ்டாலின் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது திருநாவுக்கரசர் கூறினார்.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் காவிரி பிரச்சினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பழைய கதைகளை பேசி வருகிறார்கள். அதனால் பயன் ஒன்றுமில்லை. தங்களின் தவறுகளை மறைப்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை செய்யாமலேயே வேண்டுமென்றே கர்நாடகாவில் தேர்தல் வரும் நிலையில் இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அனைத்து கட்சியில் இருந்தும் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர்.
வருகின்ற 25-ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் காவிரி பிரச்சினை குறித்து பேச அழைத்து இருக்கிறார். காங்கிரஸ் சார்பாக நான் அதில் கலந்து கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார். அவர் உட்கார்ந்து இருக்கிறார். பேசுகிறார் என்று சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் பூரண குணம் அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முதல்-அமைச்சர் உடல்நலம் குறித்து சந்தேகம் என்பது வேறு. வேண்டும் என்றே அபாண்டமாக, அநியாயமாக எழுதுவது, செல்போன், பேஸ்புக் போன்றவற்றில் அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் ஜனநாயக நாட்டில் பொது கருத்துக்களை சொல்லலாம். ஆனால் காவல்துறை பழி வாங்குவதற்காக உள்நோக்கத் தோடு மற்றவர்களை, மற்ற கட்சிகளை ஒடுக்குவதற்கு வழக்குகள் பதிவு செய்ய கூடாது. காவல்துறை எச்சரிக்கையோடு முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story