என் மலர்

  செய்திகள்

  தி.மு.க மேலிடம் அனுமதி அளித்தால் அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: கே.சி. பழனிச்சாமி பேட்டி
  X

  தி.மு.க மேலிடம் அனுமதி அளித்தால் அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: கே.சி. பழனிச்சாமி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க மேலிடம் அனுமதி அளித்தால் அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என கே.சி. பழனிச்சாமி பேட்டியில் கூறியுள்ளார்.

  கரூர்:

  தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்த போது அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் கே.சி. பழனிச் சாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

  அந்த தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி இந்தியாவில் தலைமை தேர்தல் கமி‌ஷனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த நிலையில் அடுத்த மாதம் 19-ந் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் மீண்டும் கே.சி. பழனிச்சாமி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதே போல அ.தி.மு.க சார்பில் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க, தி.மு.க.வில் வேட்பாளர்கள் மாறாத பட்சத்தில் அதை தலைமை தேர்தல் கமி‌ஷன் எவ்வாறு அணுகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

  இந்த நிலையில் தி.மு.க சார்பில் களம் இறங்க கே.சி. பழனிச்சாமி தயாராகி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தி.மு.க சார்பில் நான் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் தி.மு.க மேலிடம்தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

  தி.மு.க தலைமை கேட்டுக் கொண்டால் நிச்சயம் போட்டியிடுவேன்.

  இவ்வாறு கே.சி. பழனிச் சாமி கூறினார்.

  Next Story
  ×