என் மலர்
செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து துறைமுகங்களையும் மேம்படுத்த நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ஆலந்தூர்:
புதுடெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புடன் இருக்கிறது. அதில் இருந்து மின் உற்பத்தி நாட்டுக்கு தேவைப்படுகிறது. அதனுடைய முனையங்கள் முழுமையாக பூர்த்தி அடைந்து இருக்கிறது.
பா.ஜனதா போல் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் அரசியல் சூழ்நிலை நன்றாக இருக்கும். இது என்னுடைய கருத்து. தமிழக அரசுக்கு நல்லது. நாட்டில் உள்ள அனைத்து துறை முகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார்.
அதில் நாங்களும் வெளி நாட்டின் உதவிகளை பெற்று துறைமுகங்களை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அது நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் உயர்வாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






