என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் குறுக்கிட மாட்டேன்: மு.க.அழகிரி பேட்டி
    X

    உள்ளாட்சி தேர்தலில் குறுக்கிட மாட்டேன்: மு.க.அழகிரி பேட்டி

    உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் இதில் குறுக்கிட மாட்டேன் என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மதுரையில் இருந்து மு.க. அழகிரி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.

    உள்ளாட்சி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. இதில் குறுக்கிட மாட்டேன் என்றார்.

    அப்போது நிருபர்கள், உங்களுடைய ஆதரவு தி.மு.க.வுக்கு இல்லையென்றால் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி, ‘நல்லோர் பக்கம் நான் இருப்பேன்’ என்று கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×