என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூரண குணமடைந்து ஜெயலலிதா மீண்டும் பணியை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    பூரண குணமடைந்து ஜெயலலிதா மீண்டும் பணியை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவர் இல.கணேசன். அவருக்கு எம்.பி. பதவி கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழக முதல்வர் குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×