search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1070 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1070 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1070 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6788 உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் 17, 19-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக அடுத்த மாதம் 17-ந் தேதி 8 ஒன்றியங்கள், 6 பேரூராட்சி மற்றும் 2 நகராட்சிகளில் தேர்தல் நடைபெறும்.

    2-ம் கட்டமாக 5 ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள் மற்றும் 7 நகராட்சிகளில் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 29 லட்சத்து 37 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்களிக்க 4394 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 1070 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 283 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகளுக்காக முதல்கட்டமாக 15 ஆயிரத்து 154 பணியாளர்களும், 2-ம் கட்டமாக 15 ஆயிரத்து 325 பணியாளர்களும் தேர்தல் பணியாற்றுவர். இவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 14- ந்தேதி வரை தேர்தல் பணி பயிற்சி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×