என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி?: திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைய விரைவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச உள்ளேன். அப்போது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் பேசினார்.
திருச்சி:
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரி ஆற்றில் திறந்து விடும் தண்ணீரை கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசு அம்மாநில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அது போல் தமிழக அரசும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.
ராம்குமார் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தெளிவான விசாரணை நடத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைய விரைவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச உள்ளேன். அப்போது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story