என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்று காந்தி சிலை அருகில் நடைபெற்ற இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 6000 பேர், வேளச்சேரி மணிமாறன் தலைமையில், அந்த கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
வேளச்சேரி பகுதி இளைஞர் அணி சார்பில், காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விரைவில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நாம் சந்திக்கவிருக்கிறோம். இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை. நியாயமாக, நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. நாளைய தினமோ அல்லது நாளை மறுநாளோ அறிவிக்கலாம்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடிய இந்த நேரத்தில், அண்மையில் சட்டமன்றத்தில் அவசர அவசரமாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, மாநகராட்சி மேயர் தேர்தல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலை இருக்கக் கூடாது, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசர சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அதனை சட்டமன்றத்தில் நாம் கடுமையாக எதிர்த்தோம். அதோடு நிறுத்தாமல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, மாநகராட்சி மேயர் மட்டுமல்ல, பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் எல்லாம் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அவசர அவசரமாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதையும் நாம் எதிர்த்தோம்.
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். ஆனால் அனுமதி மறுத்தார்கள். உடனே நாங்கள் அந்த சட்ட நகலை அப்படியே சட்டமன்றத்தில் கிழித்துப் போட்டு, எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்து, கண்டனத்தை எடுத்துச் சொன்னோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தி.மு.க. பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே, இந்த தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்காது.
தி.மு.க.தான் மீண்டும் மேயர்களாக, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக வந்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு வந்திருக்கிறது. ஆகவே, இதற்காக ஒரு திட்டம் தீட்டப்பட்டு, ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நாம் ஆட்சியில் இருந்த போது சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆங்காங்கே பாலங்களை கட்டினோம். மேம்பாலங்களை கட்டினோம். நான் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களை கட்ட முடிவு செய்து, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தோம். பிறகு மா.சு. மேயரான போது எத்தனை பாலங்கள் கட்டப்பட்டது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும்.
ஆனால் அதற்கு பின்னால் வந்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க. வசம் இருக்கக் கூடிய மாநகராட்சி எங்காவது ஒரு இடத்திலாவது ஒரு பாலத்தை, மேம்பாலத்தை கட்டியதுண்டா என்று நான் கேட்க விரும்புகிறேன். எப்படி ஜெயலலிதா 110 விதியின் கீழ் கடந்த 5 வருடங்களாக, இப்போது நாலைந்து மாதங்களாக சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரோ, அதே போல மேயராக இருக்கக் கூடியவர் வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, எதாவது ஒன்றாவது செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா, நிறைவேறியிருக்கிறதா என்று கேட்டால் எதுவுமே இல்லை.
இந்த நிலைமைகளை எல்லாம் மாற்றிட வேண்டுமென்று சொன்னால் தி.மு.க.வின் தலைமையில் இந்த மாநகராட்சி வருவதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகபெரிய வெற்றி பெற்றால் தான், மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் என்ற நிலையில் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்திட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் தி.மு.க. ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறுகின்ற போது, ஆட்சியின் மூலமாக நிறைவேற்றுகின்ற வாய்ப்பில்லை என்று சொன்னாலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நிறைவேற்றக் கூடிய அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயம் உண்டு என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு எல்லாம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட நிலையை உருவாக்கித் தருவதற்கு இந்த இணைப்பு விழா பயன்பட வேண்டும்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வாகை சந்திர சேகர், அரவிந்த் ரமேஷ், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர்கள் இரா.துரைராஜ், இந்திரா நகர் ரவி, சு.சேகர், கிருஷ்ணமூர்த்தி, கணேஷ் குமார், ரவி ரமணன், பொதுக்குழு உறுப்பினர் சைதை அன்பரசு, கோட்டூர் கோ.சண்முகம்பாலவாக்கம் விசுவநாதன், சைதை குணசேகரன், சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story