என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
உள்ளாட்சி தேர்தல்: 26-ந் தேதிக்குள் வாக்காளர் திருத்த பட்டியலை தயாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
By
மாலை மலர்21 Sep 2016 2:48 AM GMT (Updated: 22 Sep 2016 11:41 AM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்காக வரும் 26-ந் தேதிக்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 29-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் வார்டு, தெரு விவரங்களுடன் தயார் செய்யப்பட்டன.
அதன்படி கடந்த 19-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியல்களை வெளியிட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் பிரதான வாக்காளர் பட்டியலை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வெளியிட்டுள்ளது.
கடந்த 1-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான திருத்த பட்டியல் வரும் 26-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) தயார் செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெறப்படும் வாக்காளர் பட்டியல் மாற்றங்களை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள கடைசி நாள் வரையில் சேர்த்து வெளியிடவும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் 2016-க்கான வாக்குச்சாவடிச் சீட்டுகள் அச்சிடும் பணியை 27-ந் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 1-ந் தேதிக்குள் முடிக்கவும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×