search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் கூட்டணி: மு.க.ஸ்டாலின் -  ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு
    X

    உள்ளாட்சி தேர்தல் கூட்டணி: மு.க.ஸ்டாலின் - ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

    உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்ததாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிகள் அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி அமைக்கும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டது.

    மதுரையில் ஒரு திருமண விழாவில் மு.க.ஸ்டாலினும், ஜி.கே.வாசனும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

    இரு தலைவர்களும் கூட்டணி பற்றி வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

    ஜி.கே.வாசனிடம் கேட்டபோதெல்லாம் சட்டமன்ற தேர்தல் போல் அல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தாமதமின்றி கூட்டணி பேசி முடிக்கப்படும் என்றார்.

    இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று காலை 11.30 மணியளவில் சென்றார்.

    அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அரசியல் ரீதியாக சந்தித்து பேசினேன். எங்கள் சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதித்தோம். தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றியும் கேட்டறிந்தேன்.

    பொதுவான முல்லைப்பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சினைகளில் அரசின் மெத்தனபோக்கு பற்றி பேசினோம்.

    அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எல்லா கட்சியும் வலியுறுத்தியும் அரசு செவி சாய்க்காமல் இருப்பது பற்றியும் விவாதித்தோம்.

    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தி.மு.க. தலைவர் கலைஞரையும் சந்தித்து பேச இருக்கிறேன் என்றார்.

    அவரிடம் தி.மு.க.-த.மா.கா. கூட்டணி பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ‘இருவரும் அரசியல் ரீதியாக சந்தித்து பேசியதன் அர்த்தம் அதுதானே’ என்றார்.
    Next Story
    ×