என் மலர்

  செய்திகள்

  காவிரி பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையாக செயல்படுகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
  X

  காவிரி பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையாக செயல்படுகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு காவிரி பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
  ஆலந்தூர்:

  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் உரிமைகளை பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் முழுமையாக பெறவில்லை.

  கர்நாடகாவை சேர்ந்தவர்கள் செய்கின்ற போராட்டங்களில் தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும், தமிழர்களில் கடைகள் உடைக்கப்படும் என்றும் சொல்லி மிரட்டுவது சரியானது அல்ல.

  கர்நாடகாவில் சட்டம் -ஒழுங்கு என்பது அந்த மாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை.அதற்கு முதல்-மந்திரி சித்தராமையாதான் பெறுப்பு.

  காவிரி ஆறு தமிழ்நாடு, கர்நாடகா இரண்டிற்குமே சொந்தமானது. ஆனால் அவர்களுக்கு சொந்தமானதை நாம் பெற்று விட்டதாக போராடுகிறார்கள். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வரை கர்நாடகாகாரர்கள் மோசமாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  காவிரி பிரச்சனையில் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்பு 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு சித்தராமையா எத்தனை முறை கடிதம் எழுதினார். மத்திய அரசு எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கக்கூடாது என்று இருக்கிறது.

  அதனால்தான் அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியபோது தண்ணீர் இருக்கிறது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்போதும் டெல்லியில் காவிரி கண்காணிப்பு குழுவை கூட்டி உள்ளது. மத்திய அரசு காவிரி பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படுகிறது. காவிரி பிரச்சனையை இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் உரிமையை எந்தவிதத்திலும் இழந்து விட முடியாது. தமிழக பா.ஜனதா தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கலப்பு திருமணம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. திருமணம் என்பது ஜாதியின் அடிப்படையில் தான் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த நடைமுறைதான் உள்ளது.

  நாம் எல்லோரும் ஒன்றுதான். எனவே நாம் கலப்பு திருமணத்தை வரவேற்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கலப்புதிருமணத்துக்கு எதிரான செயல்களை எதிர்க்க வேண்டும். கலப்பு திருமணம் என்பது நல்ல வி‌ஷயம். இதற்கு சமூக நீதி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் பொதுமக்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×