என் மலர்

    செய்திகள்

    சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு
    X

    சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக சட்டசபையில் முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுத்ததால் தி.மு.க.-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் அதிகாரிகள் பற்றி இங்கு பேச முடியாது. நீங்கள் பேசுவது அவை குறிப்பில் ஏறாது. இது சம்பந்தமாக பேச அனுமதி இல்லை.

    நிர்வாகத்தில் செய்வதை வெளியே சொல்ல முடியாது. எனவே நீங்கள் வேறு பிரச்சனை பற்றி பேசலாம் என்றார்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இதே பிரச்சனை பற்றி பேச முற்பட்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சபையில் இருந்து மு.க.ஸ்டாலின் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதே போல் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமியும் இதே கருத்தை பேச முற்பட்டார். அவருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் காங்கிரசும் வெளிநடப்பு செய்தது. அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் உறுப்பினர் அபுபக்கரும் வெளி நடப்பு செய்தார்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று ஊடகங்களில் பரவலாக வரும் செய்தி முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட பிரச்சனைதான். இவர்களை என்ன காரணத்துக்காக அரசு சஸ்பெண்டு செய்தது என்பதை விளக்க வேண்டும். இது குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன். ஆனால் அதிகாரிகள் பெயரை கூறக் கூடாது என்று சொல்லி எனது பேச்சை சபாநாயகர் நீக்கி விட்டார். பேச்சை நீக்கியது மட்டுமின்றி தொடர்ந்து பேசவும் அனுமதி மறுத்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாங்கள் வெளி நடப்பு செய்தோம்.

    அரசு அதிகாரி பெயரை குறிப்பிட்டு சொல்லக்கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். ஆனால் இதே கூட்டத்தொடரில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். அது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படியானால் முதல்-அமைச்சருக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மூத்த அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான பத்திரிகைகள் சுட்டி காட்டி எழுதியுள்ளது.

    தனியார் மின் நிறுவனங்களிடம் 3,330 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.91-க்கு வாங்குவதற்கு அப்போது மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் கொடுக்கவில்லை. இப்படி அதிக தொகை கொடுத்து வாங்கினால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கருணாநிதி, இளங்கோவன் ஆகியோர் குற்றச்சாட்டு கூறி அறிக்கை வெளியிட்டனர்.

    2014 தேர்தல் சமயத்தில் கேரளாவின் என்.டி.பி.சி.யிடம் இருந்து யூனிட் மின்சாரம் ரூ.11 கொடுத்து வாங்கியது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1,000 கோடி இழப்பு என புகார் எழுந்தது. இதே போல் மேலும் பல நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் வாங்கப்பட்டதிலும் நிலக்கரி வாங்கப்பட்டதிலும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை அரசு சஸ்பெண்டு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

    அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த அரசு இதன் பின்னணியில் உள்ள அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அரசு இதுவரை சஸ்பெண்டுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை என்ன காரணத்துக்காக சஸ்பெண்டு செய்தார்கள், செய்த தவறு என்ன? யார்- யார் உடந்தை என்பதை அரசு விளக்க வேண்டும். இதுபற்றி நான் சட்டசபையில் விளக்கம் கேட்க முற்பட்டேன். ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர்.

    பொதுவாக அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கம் கேட்காமல் சஸ்பெண்டு செய்யப்பட்டதில் மர்மம் உள்ளது. உண்மை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×