என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஆளும்கட்சிக்கு ஆதரவாக அமையும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஆளும்கட்சிக்கு ஆதரவாக அமையும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஆளும்கட்சிக்கு ஆதரவாக அமையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    சட்டசபையோ, பாராளுமன்றமோ எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சி என்று இருக்க வேண்டும். தி.மு.க வின் ஆதரவை வைத்து சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் செயல்பாடு காலதாமதமாக இருக்கிறது.

    அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமையும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    சட்டசபையில் சபாநாயகரும், ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு தரவேண்டும். எதிர்கட்சிகளும் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறுவது கர்நாடகத்தின் வழக்கமான பதில்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×