search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் செலவுக்கணக்கு: தேர்தல் கமிஷன் வெளியீடு
    X

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் செலவுக்கணக்கு: தேர்தல் கமிஷன் வெளியீடு

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தேர்தல் செலவு குறித்த விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர்தல் முடிவு வெளியாகி 30 நாட்களுக்குள் அவர்கள் செய்த செலவுக் கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

    அதை இந்திய தேர்தல் கமிஷன், பார்வையாளர்களை வைத்து சரிபார்த்து முடிவு செய்யும். பின்னர் அந்த கணக்கு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். (கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்களில் சுமார் 150 பேர் மட்டும் செலவுக் கணக்கை காட்டவில்லை).

    அந்த வகையில் இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் நேற்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு;

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த தேர்தல் செலவு ரூ.24.55 லட்சம்; தேனியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.11.53 லட்சம்; உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.16.70 லட்சம்;

    திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி ரூ. 19.12 லட்சம்; கொளத்தூரில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.25.01 லட்சம்; திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.12.75 லட்சம்; திருச்சி மேற்கு கே.என்.நேரு ரூ.11.37 லட்சம்; திருவண்ணாமலை எ.வ.வேலு ரூ.10.06 லட்சம், லால்குடியில் தி.மு.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் ரூ.27.60 லட்சம் (இதுதான் அதிகபட்ச செலவாகும்).

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ரூ.19.01 லட்சம்; விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ரூ.15.90 லட்சம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×