என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் கிழக்கு-மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகள் எவை?: ஜெயலலிதா அறிவிப்பு
  X

  திருவள்ளூர் கிழக்கு-மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகள் எவை?: ஜெயலலிதா அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் கிழக்கு-மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகள் எவை என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
  சென்னை:

  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட கழகங்கள் இன்று முதல் பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

  ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர்.

  திருவள்ளூர் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்

  பொன்னேரி (தனி), கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி (தனி), திருவள்ளூர், திருத்தணி.

  திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள். கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச்செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சி பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×