என் மலர்

    செய்திகள்

    சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சென்னையில் 22-ந் தேதி தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்
    X

    சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சென்னையில் 22-ந் தேதி தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 22-ந் தேதி தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டசபையில் நடந்த சம்பவம் தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட 9 உறுப்பினர்களை அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள செய்யலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிவில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சபாநாயகருடைய சர்வாதிகார தீர்ப்பை பற்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உடன் விவாதித்தோம். இதில் உணர்ந்துகொண்டது என்னவென்றால் சட்டசபை கூட்டத்தொடரை பொறுத்தவரையில் ஒருமுறை கூட எங்களை வெளியேற்றவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்லி எச்சரிக்கவோ, வெளியேற்றவோ இல்லை.

    ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததுபடி ஒட்டுமொத்தமாக சபாநாயகரை வைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றியிருக்கின்றனர். அ.தி.மு.க. இந்த நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது முன்கூட்டியே நாங்கள் அறிந்ததுதான். இடைநீக்கம் குறித்து எங்கள் தலைவர் கருணாநிதியிடம் கூறினோம்.

    அவருடைய ஆலோசனையின்படி ‘சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 22-ந் தேதி முதல் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

    அதன் அடிப்படையில் முதல் கட்டமாக, ஜெயலலிதா நாங்கள் பங்கேற்கக்கூடாது என்று நினைத்த காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் தினத்தில் வடசென்னையில் பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் கருணாநிதி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான இடைநீக்கத்தை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடர் புறக்கணிப்பு செய்யப்படுமா?

    பதில்:- புறக்கணிப்பு என்ற முடிவை நாங்கள் ஒருபோதும் எடுத்தது கிடையாது.

    கேள்வி:- இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்படுமா?

    பதில்:- வழக்கு தொடுக்கும் எண்ணம் இல்லை.

    இடைநீக்கம் செய்யாத உறுப்பினர்கள் பங்கேற்பு?

    கேள்வி:- கருணாநிதி உள்பட இடைநீக்கம் செய்யப்படாத 9 உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பார்களா?

    பதில்:- இடைநீக்கம் செய்யப்படாத உறுப்பினர்கள் பங்கேற்பார்களா? இல்லையா? என்பது குறித்து இன்று தெரியும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
    Next Story
    ×