என் மலர்

  செய்திகள்

  4 மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
  X

  4 மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி, நெல்லை புறநகர், திருச்சி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களை மாற்றம் செய்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  சென்னை:

  முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  துத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

  தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் சி.த. செல்லப்பாண்டியன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

  திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.நாராயணபெருமாளும் (இவர் ஏற்கெனவே வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.)

  திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.ஜெயினுலாப்தீனும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ராஜா (எ) அந்தோணி அமலராஜா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

  திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி.யும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் டி.பால்துரையும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் ஜெ. அகிலனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

  திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மனோகரன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

  திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

  திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டக்கழகங்கள் இன்று முதல் பின்வருமாறு சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

  1. ஆவடி, 2. மதுரவாயல், 3. அம்பத்தூர், 4. மாதவரம், 5. திருவொற்றியூர்.

  1. பொன்னேரி(தனி), 2. கும்மிடிப்பூண்டி, 3. பூவிருந்தவல்லி(தனி), 4. திருவள்ளூர், 5. திருத்தணி.

  திருவள்ளூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் வி.அலெக்சாண்டரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிறுணியம் பி.பலராமனும் நியமிக்கப்படுகிறார்கள்.

  திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

  தென்சென்னை வடக்கு மாவட்டம்

  அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சரஸ்வதி ரெங்கசாமி இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

  ராதாபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் எம்.ராஜா (எ) அந்தோணி அமலராஜாவும், பணகுடி பேரூராட்சிச் செயலாளர் பொறுப்பில் எம்.ஜெயினுலாப்தீனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
  Next Story
  ×