என் மலர்
செய்திகள்

மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையே வேண்டும்: புதுக்கோட்டையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையே வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடு என்று புதுக்கோட்டையில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் வருகிற 27-ந்தேதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்படும். அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது.
2015-ல் ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது. தேர்தலின் போது தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தொகுதி உடன்பாடு செய்திருந்தது. அது தேர்தல் உடன்பாடுதான். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. அதனால் இரண்டு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகினாலும் எந்தவித ஆபத்தும் இல்லை.
குறைந்த பட்ச செயல் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டியக்கம் தொடரும். நான்கு கட்சிகளும் மக்கள் பிரச்சனைக்காக களப்பணி ஆற்றும். உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் கமிஷன் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி முறையான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர் தேர்தலில் நேரடி தேர்தல்தான் நடந்து வருகிறது. அதே முறை தொடர வேண்டும். மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையே வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடு.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து வருவதை கண்டித்து ஜூலை மாதம் கண்டன இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முறை அமல் படுத்தப்படவில்லை. இந்த விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story