என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையால் எதிர்க்கட்சிகள் மிரண்டுள்ளன: சிங்கமுத்து வாக்குசேகரிப்பு
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்தார். அவர் பேசியபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் 1பவுன்,பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர், வீடுதோறும் 100யூனிட் மின்சாரம் போன்ற அறிவிப்புகளை பார்த்தவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மிரண்டுபோயுள்ளனர்.
மேலும் தமிழக மக்களுக்காக திட்டங்களை தீட்டும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்.ஆகவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செங்கப்படை, வெள்ளாகுளம், புளியங்குளம்,எம்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் முன்னாள்மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்டதுணை செயலாளர் அய்யப்பன், மாநில சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன், நகரச் செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம்,தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய சேர்மன் தமிழழகன், ஒன்றிய துணைச் செயலாளர் சுமதி சாமிநாதன், உள்ளிட்டோர் சென்று வாக்கு சேகரித்தனர்.






