search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்கு பயனுள்ள டிஜிட்டல் சாதனங்கள்
    X
    பெண்களுக்கு பயனுள்ள டிஜிட்டல் சாதனங்கள்

    பெண்களுக்கு பயனுள்ள டிஜிட்டல் சாதனங்கள்

    பெண்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் கேஜெட்டுகள் ஏராளம் உள்ளன. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, உறுதுணையாக விளங்கும் பெண்களுக்கு அவற்றை பரிசளிக்கலாம்.
    நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கேஜெட்டுகள் நேரத்தை விரயமாக்கும் தன்மை கொண்டவையாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதை பொறுத்து அதன் தனித்துவம் வெளிப்படும். அவற்றுள் பெண்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் கேஜெட்டுகள் ஏராளம் உள்ளன. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, உறுதுணையாக விளங்கும் பெண்களுக்கு அவற்றை பரிசளிக்கலாம். அத்தகைய கேஜெட்டுகள் சிலவற்றை பார்ப்போமா..?

    பிட்னஸ் டிராக்கர்:

    உலகளவில் பலருடைய வாழ்க்கையை கொரோனா காலகட்டம் தலைகீழாக மாற்றியமைத்துவிட்டது. தற்போது பலரும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஒருவரின் உடல் நலனை கண்காணித்து அவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் கேஜெட்டுகள் ஏராளம் உள்ளன. அவற்றுள் பிட்னஸ் பேண்ட் அல்லது பிட்னஸ் டிராக்கர் முதன்மையானது.

    கைக்கடிகாரம் வடிவத்தில் இருக்கும் இது நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட பயிற்சிகளை செய்வதற்கு தூண்டுகோலாக அமையும். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் காட்சிப்படுத்தும். சாப்பிடும் உணவு, பருக வேண்டிய நீரின் அளவு போன்றவற்றையும் கண்காணிக்கும். அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கு வித்திடும். இதய துடிப்பையும் கணக்கிடும்.

    இலக்குகளை அடைவதற்கும் தூண்டுகோலாக அமைந்திருக்கும். எவ்வளவு நேரம் தூங்கினீர்கள், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தீர்களா? தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? என தூக்கத்தின் தன்மையை கண்காணிக்கும் திறனும் பிட்னஸ் டிராக்கருக்கு உண்டு. செல்போனை பார்க்காமலேயே உங்களுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களை பார்க்கும் வசதி கொண்ட பிட்னஸ் டிராக்கர்களும் இருக்கின்றன. இதனை பெண்கள் பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக அமையும்.

    வீடியோ பிரேம்:

    மனதுக்கு பிடித்தமான நபர்களின் புகைப்படங்கள், சுற்றுலாவுக்கு சென்றபோது மனதை வருடிய இடங்கள், மறக்கமுடியாத தருணங்கள், நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரேம் வடிவில் வீட்டு சுவரில் மாட்டி அழகு பார்க்கும் நிலை குறைந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் வடிவில் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிக்கும் காலம் இது. அத்தகைய புகைப்படங்களை வீடியோ வடிவில் தொகுத்து ரசித்து பார்க்க வைக்கும் வீடியோ பிரேம்களை பரிசளிக்கலாம்.

    ஜி.பி.எஸ் டிராக்கர்/டைல் டிராக்கர்:

    வீட்டு அறை சாவி, மோட்டார் சைக்கிள் சாவி உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போய் தேடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும் கைப்பை மற்றும் அதில் வைக்கப்படும் விலை மதிப்புள்ள பொருட்கள் தொலைந்து விடாமல் பாதுகாக்க ஜி.பி.எஸ். டிராக்கர், டைல் டிராக்கர் போன்ற சாதனங்களை வாங்கி உபயோகிக்கலாம்.

    பை, கார் சாவியுடன் இணைக்கக்கூடிய இந்த சிறிய சாதனத்தை மொபைல் போன் மூலம் பயன்படுத்தலாம். பொருட்களின் இருப்பிடத்தை எளிதாக கண்காணிக்க முடியும். இந்த சாதனம் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெளி இடங்களுக்கு செல்லும்போது எளிதாக பயணம் மேற்கொள்ள உதவும்.

    ஈரப்பதமூட்டிகள் (ஹுமிடிபையர்):

    பெண்கள் எப்போதுமே சரும ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மின்னுவதற்கு ஏற்ற பராமரிப்பு முறைகளை கையாள்வார்கள். ஈரப்பதமூட்டிகள் அதற்கு உதவும். அவை காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்து சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும் தன்மை கொண்டவை. ஈரப்பதமூட்டிகளை படுக்கை அறையில் பயன்படுத்தலாம். தூக்கத்தின்போது பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஈரப்பதமூட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனங்களை சரி செய்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தூக்கமே உதவுகிறது. அதனால் படுக்கையறையில் ஈரப்பதமூட்டியை இடம்பெற செய்வது இயற்கையாகவே தூக்கத்தின் தன்மையை அதிகரிக்க செய்யும்.

    ஹேர் டிரையர்:

    இது பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இதனை பயன்படுத்தும் விதத்தை பொறுத்துதான் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பாதகமில்லாமல் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுமானவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
    Next Story
    ×