search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்
    X
    அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்

    அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்

    நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர்.
    அறிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர். அந்த வகையில் அறிவியலில் உலகின் தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்களை பற்றி பார்ப்போம்.

    மேரி கியூரி

    கதிரியக்கம் தொடர்பான மேரி கியூரியின் கண்டுபிடிப்புகள் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்கான நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி.

    பெக்கி விட்சன்

    பெக்கி விட்சன் உயர்நிலைப்பள்ளியின் இறுதி ஆண்டில் படித்து கொண்டிருந்த போது நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சனும் ஒரு விண்வெளி வீராங்கனை.

    மேரி தர்ப்

    1953-ல் அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் மேரி தர்ப்.

    வாண்டா டயஸ் மெர்சிட்

    தரவு புலனுணர்வு நட்சத்திரங்களில் இருந்து வரும் செயற்கைக்கோள் தகவலை மொழிபெயர்த்தது. இது காட்சியை வரைபடங்களுக்கு பதிலாக ஒலி அலைகளாக உருவாக்கும் என கண்டறிந்தார்.

    குவாரிஷா அப்துல் கரீம்

    எய்ட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்

    தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் எப்படி பரவுகிறது மற்றும் பெண்கள் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்று 25 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2013-ம் ஆண்டில் நாட்டின் உயரிய விருது (order of mapungubue) வழங்கியது தொன்னாப்பிரிக்க அரசு.

    சோயோன் யீ

    2008-ம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இதற்கான கடுமையான போட்டியில் சோயோன் 36000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி

    ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பில் முக்கிய பங்களித்தவர்

    மேரி கியூரியின் சாதனையால் கவரப்பட்டு அணு இயற்பியலை ஆர்வத்துடன் பயின்றார். ஹிக்ஸ் போஸன் என்பது நிறையுடைய ஓர் அணு துகள் ஆகும். அணுவின் கட்டமைப்புக்கு அடிநிலை தோற்று பொருளாக ஹிக்ஸ் போஸன் இருக்கக்கூடும் எனக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பில் பங்களித்ததற்காக ரஜாவுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன .மொராக்கோவில் மருத்துவ இயற்பியலில் முதுகலை பட்ட படிப்பை உருவாக்கியதில் ரஜாவின் பங்கு மகத்தானது.

    டி.அனுஷா,

    இரண்டாம் ஆண்டு கணிதத்துறை,

    உதயா கல்வியியல் கல்லூரி,

    அம்மாண்டிவிளை.
    Next Story
    ×