என் மலர்

  பெண்கள் உலகம்

  பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளும், தீர்வுகளும்
  X

  பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளும், தீர்வுகளும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாய்மார்களுக்கு குழந்தையின்மை ஒரு கோளாறாகிறது.
  • பல்வேறு மருந்துகள் மூலம், குழந்தைப்பேறு எளிதாகும்.

  மாணவிகளுக்கு இரும்புச்சத்து குறைபாட்டால்தங்கள் பாடங்களில் கவனமின்மை, மறதி, களைப்பு, தினசரி நடவடிக்கைகளில் உற்சாகமின்மை நிகழ்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான கீரைகள், பழங்கள், உலர் பழங்கள், சர்க்கரைக்கு பதில் வெல்லம் ஆகியன உட்கொள்வது நல்ல பலனளிக்கும்.

  பருவ பெண்களுக்கு, மாதவிடாய் ஒழுங்கற்று நிகழ்வது அல்லது நிறைய இரத்தப் போக்கு ஆகியன பொதுவாகக் காணப்படும் குறைபாடுகள். வயதுக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் இதுபோல நிகழ்வது சகஜம் என்றாலும், 18 வயதுக்கு மேலும் இது தொடரக்கூடாது. பரிசோதனைகள் மூலம் இவ்வாறு குறைபாடுள்ள மாதவிடாய் நிகழ காரணிகளான தைராய்டு சுரப்பிக் கோளாறு, இரத்தப்போக்கு மற்றும் உறைவது, ஏனைய குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம், கருப்பைக் கோளாறுகளும் நூற்றுக்கு ஒன்பது பெண்களுக்கு இவ்வாறு நிகழக் காரணமாகிறது. ஹார்மோன் குறைபாடுகளின் காரணமாகவும் முகப்பரு, முகத்தில் மீசை லேசாக அரும்புதல், முடி உதிர்தல் மற்றும் கழுத்து கருப்பாதல் ஆகியன நிகழ்கின்றன.

  தாய்மார்களுக்கு குழந்தையின்மையும் ஒரு கோளாறாகிறது. சத்தான சரிவிகித உணவும், வீட்டிலிருந்து செய்யும் உடற்பயிற்சிகளும் இதனைச் சரி செய்துவிடும். 5% முதல் 10% சதவீத எடைக் குறைப்பு இதற்கு போதுமானது. எனினும் 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதின் மூலமே இக்குறையினை நீக்க முடியும். மருத்துவர் ஆலோசனைப்படி பல்வேறு மருந்துகள் மூலம், குழந்தைப்பேறு எளிதாகும். தைராய்டு மற்றும் நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியம். மாதவிடாய் தவறிப்போனால் மகப்பேறு மருத்துவரைக் கண்டு, எளிய பரிசோதனை மூலம் கருவுற்றிருப்பதை அறியலாம். அதன் பின் ஸ்கேன் செய்து கரு நல்ல முறையில் இருக்கிறதா? அல்லது குறைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

  கருவுற வேண்டாம் என நினைக்கும் பெண்களும் அதைத் தவிர்க்க மகப்பேறு மருத்துவரைக் கண்டு, அவரது ஆலோசனைப்படி பொருத்த மான கருத்தடுப்பு முறைகளை மேற்கொள்ளலாம்.தாய் மார்கள், நீண்ட இரத்தப் போக்கு, கருப்பைக் கட்டிகள், கருப்பைப் புற்று ஆகியன விரைவில் கண்டு சரி செய்ய வும் மருத்துவரை முன்னதாக அணுகுவது முக்கியம்.

  குறிப்பாக மார்பகப் புற்று நோயினை, மருத்துவரின் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், மேமோக்ராம் சோத னைகள் மூலம் கண்டு பிடித்து சிகிச்சை முன்கூட்டியே தொடங்க வேண்டும். சந்தே கப்படும்படியாக மார்பக கட்டிகள் இருந்தால் மருத்துவ ரிடம் காட்டுவது அவசியம். இத்தகு நோயுள்ளவரின் குடும்ப பெண்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கருப்பை புற்றுநோய்க்கு இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டன. 9 முதல் 14 வயதில் இத்தடுப் பூசிகளை பெண்கள் போட் டுக்கொள்ளலாம். இவ்வய தினைத் தாண்டியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிமுறைகள் உள்ளன. 21 வயதினை தாண்டிய பெண் கள், கருப்பை ஸ்மியர் எனும் சோதனை 3-5 ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் செய்து கொள்ள வேண்டும்.

  மாதவிடாய் நின்றுவிட்ட வயதான பெண்கள், திடீர் ரத்தப் போக்கு நிகழ்ந்தாலும் மருத்துவரைக் கண்டு சிகிச்சை பெற வேண்டும். சிறுநீர்ப் பாதை, கருப்பை கோளாறுகள் இரத்தப் போக்கின் காரண மாக இருக்கலாம்.இவ்வயதில் எலும்புகள் மென்மை அடைவதும் நிகழ்கிறது. இவற்றிற்கு தீர்வு காண சிகிச்சையே வழி.

  இறுதியாக எல்லா வயதுப் பெண்களுக்கும் சூரிய ஒளி படாமையால், விட்டமின் D குறைபாடு உண்டாகிறது. இதன் காரணமாக களைப்பு, முடி உதிர்தல், மன அழுத்தம் உண்டாகின்றன. சிறு இரத்தப் பரிசோதனை மூலம் விட்ட மின் D குறைபாட்டினைக் கண்டறிந்து, மருந்து மற்றும் ஊசி மூலம் இதனைக் குணப் படுத்திவிடலாம்.

  Dr.மலர்விழி குகன் M.S., DNB, IPPC (Australia)மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்

  Next Story
  ×