search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கர்ப்பமான முதல் மாதத்தில் செய்ய வேண்டியவை...?
    X

    கர்ப்பமான முதல் மாதத்தில் செய்ய வேண்டியவை...?

    • உங்களது கர்ப்ப காலத்தை மறக்க முடியாததாக மாற்றலாம்.
    • புதிய டயட்டைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

    கர்ப்பத்தின் முதல் மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்த அம்சங்களில் சிலவற்றை பின்பற்றுவதன் மூலம், உங்களது கர்ப்ப காலத்தை மறக்க முடியாததாக மாற்றலாம். இந்த அம்சங்களில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    நீங்கள் புதிய டயட்டைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். ரத்த சோகை உள்பட பல ஹெல்த் கன்டிஷனைத் தடுக்க நீங்கள் கீரை மற்றும் சீஸ் உடன் உணவைத் தொடங்கலாம்.

    குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், நீங்கள் மது மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற பழக்கங்களைத் தொடர்வது குழந்தையின் பிறவிக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.

    புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

    எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம். உங்கள் மருத்துவரைத் தொடர்புகொண்டு உங்கள் உடலுக்கும் உங்கள் கர்ப்பகால மாதத்திற்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். வழக்கமாக எளிதான உடற்பயிற்சியுடன் தொடங்குவதும், இறுதியில் மிகவும் நெகிழ்வான பயிற்சிகளை செய்வதும் நல்லது. நடைபயிற்சி மற்றும் ஸ்டிரெச்சிங் போன்ற பல பயிற்சிகள் குறிப்பாக பிரசவத்தின் போது செய்வது பெரும் உதவியாக இருக்கும்.

    ஒவ்வொரு நாளும் நீங்கள் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பம் தொடர்பான அம்சங்களை ஆய்வு செய்ய தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்க. மேலும் நீங்கள் டெலிவரிக்கு தயாராவதற்கு சில கர்ப்பம் தொடர்பான இதழ்களையும் படிக்கலாம்.

    உங்க குழந்தையின் முதல் உதை அல்லது படபடக்கும் அசைவுகள் போன்ற சிறப்புத் தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் காலெண்டரில் தேதிகளைக் குறித்து வைக்கலாம்.

    உங்க கர்ப்பத்துடன் தொடர்புடைய புகைப்பட புத்தகத்தை உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேடிக்கையாக இருக்கும். நீங்களே ஒரு புத்தகத்தை வாங்கி உங்களது கர்ப்ப காலத்தில் நீங்கள் எடுத்த புகைப்படங்களை அதில் ஒட்டலாம். உங்கள் குழந்தை உதைக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு மிகவும் சுவாரயசிமான அனுபவத்தை கொடுக்கும்.

    மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

    நீங்கள் உங்கள் மருத்துவரை சந்திக்கும் போது, சில கேள்விகளைக் கேட்பதுடன், அனைத்து விளக்கங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது குடும்பத்தின் மருத்துவ வரலாறு அல்லது பழக்க வழக்கங்களைப் பொறுத்து நீங்கள் எடுக்க வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.

    நீங்கள் ஏற்கனவே மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அந்த மருந்தின் பாதுகாப்பு பற்றி நீங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும். உங்களது மருத்துவர் அந்த மருந்தைத் தொடரவும் அல்லது நிறுத்தவும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.

    உங்களது அடுத்த மருத்துவ பரிசோதனைகளின் அட்டவணை குறித்தும் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

    Next Story
    ×