search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிக்கொணர்வது எப்படி?
    X

    பெண்களுக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிக்கொணர்வது எப்படி?

    • தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
    • தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைப்பவர்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி அடைவது என்பது இக்கட்டுரை விளக்குகிறது.

    தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து துறை சார்ந்த செய்திகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகவல்கள் என்பது அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்வது தான் தொழில் முனைவோர்களுக்கான அடிப்படை தகுதியாக உள்ளது. அதாவது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி குறுகிய காலகட்டத்தில் தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.

    தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி தலைமை பொறுப்பில் உள்ளோர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் தொழிலை நடத்தி செல்வதற்கான மனத்தெளிவு கிடைக்கும். தம்மைப்பற்றி பெருமையாகவோ அல்லது தாழ்வாகவோ நினைப்பவர்கள் எளிதாக சூழ்நிலை கைதிகளாக மாறுகிறார்கள். எனவே தம்முடைய பலம் மற்றும் பலவீனம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் ஒரு செயலை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதில்லை தெளிவாக சொல்வதன் மூலம் மற்றவர்களது நம்பிக்கையை எளிதாக பெறுகிறார்கள்.

    தொழில் முனைவோர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதற்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் தங்களுக்குரிய இடத்தை கச்சிதமாக அறிந்திருப்பதுடன் சக போட்டியாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

    திறமையான தொழில் முனைவோர்கள் தங்கள் செயல் திட்டங்களை சரியாக திட்டமிடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை, உடனடியாக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகிய தகவல்களை தெளிவாக அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக தினமும் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளப்படும் குறிப்புகள் கூட வெற்றிக்கு அடிப்படையாக அமையக்கூடும். மேலும் எண்ணங்கள் குறிப்புகளாக எழுதப்படும் போது அவை ஒருவரது நிறை குறைகளை வெளிக்காட்டும் கண்ணாடியாக அமைகிறது. தினமும் டைரியில் அன்றைய தினத்தில் நடந்தவை பற்றி குறிப்பாக எழுதுவதன் மூலம் ஒருவரது நினைவாற்றல் மேம்படுகிறது. வெற்றிக்கு அது அவசியம்.

    தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் சொந்த அனுபவங்கள் மூலமாகவும், சரியான நபர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறனை பெற வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைக்கும் பெண்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    Next Story
    ×