search icon
என் மலர்tooltip icon

  பெண்கள் உலகம்

  வீடு வாங்கப்போறீங்களா?
  X

  வீடு வாங்கப்போறீங்களா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்களுக்கு புலப்படுவது போன்ற விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் அனைத்து கேபிள்களும் சரியாக காப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  நம்மில் பெரும்பாலோருக்கு சொந்தமாக வீடு வாங்குவது என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். அந்த கனவு நனவாகும் பொழுது எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும் என்பதைப்பற்றி சிறிதாக ஒரு அலசல். சொந்தமாக வீடு வாங்கும் பொழுது வீட்டின் அமைப்பு, வீட்டின் உட்புற அமைப்பு, பவுண்டேஷன் மற்றும் எலிவேஷன் ஆகியவை பற்றி பொதுவாக கேட்டு அறிந்து கொள்வோம்.. இது மட்டுமல்லாமல் வேறு எவற்றை எல்லாம் சரி பார்க்க வேண்டும் என்பதைப்பற்றி ஹோம் இன்ஸ்பெக்சன் செக்லிஸ்ட் தயார் செய்து அவற்றை வைத்துக்கொண்டு சரி பார்க்கலாம் வாங்க..

  *எதற்காக ஹோம் இன்ஸ்பெக்சன் செக்லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன?

  # வீட்டை வாங்கி குடியேறிய பிறகு ஏற்படக்கூடிய கசிவுகள், ஈரப்பதம், குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

  # நம் கண்களுக்குத் தெரியாத மற்றும் வீட்டை விற்பவர்கள் நம்மிடம் மறைக்கக் கூடிய சிக்கல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செக்லிஸ்ட் உதவிகரமாக இருக்கும்.

  # கட்டமைப்பு அல்லது பொருள் குறைபாடுகளை அடையாளம் காணமுடியும்.

  # தொலைதூர பகுதியில் அமைந்துள்ள வீடு மற்றும் இடத்தை மதிப்பிடலாம்.

  # லூஸ் வயரிங், சட்டவிரோத கட்டுமானங்கள் அல்லது தவறான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் பின்னர் சிக்கல்களை உருவாக்குவதை தவிர்க்கலாம்.

  # வீடு குறித்த இந்த ஆய்வறிக்கை வீடு வாங்குவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலும் நன்மையை அளிப்பதாக இருக்கும்..

  * வீட்டு ஆய்வறிக்கை சரிபார்ப்பு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள்:

  வீட்டு ஆய்வாளர்(ஹோம் இன்ஸ்பெக்டர்) வீட்டை வாங்குபவருக்கு வேலை செய்பவராக இருப்பார். வீட்டை வாங்குபவருக்கு ஒப்பந்தத்தின் மூலம் என்ன கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வது அவரது கடமையாகும். இதுமட்டுமல்லாமல் நாம் வாங்கக்கூடிய சொத்தின் தற்போதைய நிலை மற்றும் என்ன சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பது குறித்தும் வீட்டு ஆய்வாளர் அறிந்திருக்க வேண்டும்.பொதுவாக ஹோம் இன்ஸ்பெக்சன் என்பது குறைந்தபட்சம் 2 மணி முதல் நான்கு மணி நேரங்கள் வரை நடைபெறும். இந்த நேரத்தில் வீட்டை வாங்குபவரும் ஆய்வாளருடன் செல்லலாம். வீட்டை ஆய்வு செய்த பிறகு முக்கியமான சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட விரிவான அறிக்கையை ஆய்வாளர் வழங்குவார். ஹோம் இன்ஸ்பெக்சன் செய்யும்பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

  பவுண்டேஷன்:

  வீடு வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் பவுண்டேஷன் எனப்படும் அடித்தளமாகும்.

  அடித்தளத்தை இணைக்கும் சுவர்களின் அடிப்பகுதியில் எந்த விரிசல்களும் இருக்கக்கூடாது.அடித்தளத்திற்கு அருகில் எந்தப் பகுதியும் ஈரமாகவோ அல்லது புதைந்திருப்பது போன்றோ தோன்றக்கூடாது.அடித்தளத்திற்கு அருகில் பெரிய மரங்கள் இருக்கக்கூடாது.

  லீக்கேஜ் அல்லது சீப்பேஜ்:

  சிங்கை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது நீர்க்கசிவு இருக்கின்றதா என்பதை சரிபார்க்க வேண்டும்.வீட்டின் அடித்தளம், மேற்கூரை போன்ற அனைத்துப் பகுதிகளிலும்- நீர் எளிதில் ஊடுருவக்கூடிய இடங்களில் கசிவு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்..

  மேற்கூரை

  கப்பிங், கர்லிங், விரிசல் அல்லது சேதம் இல்லாமல் ரூஃப் ஷிங்கிள்ஸ் அப்படியே இருக்க வேண்டும். கூரைகளில் கூடுதல் சிமெண்ட் திட்டுகள் தெரியக்கூடாது.சோஃபிட்கள் சிதைவு அல்லது துரு பிடிப்பது போன்ற எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தக் கூடாது.மேற்கூரையில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் சரியாக செல்வதற்கான பாதை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.புகை போக்கிகள் இருந்தால் அவை நேராகவும் அவற்றின் உறை நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.

  வெளிப்புறங்கள்:

  கண்களுக்கு புலப்படுவது போன்ற விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். சுவர்களில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது. செங்கல் வெளிப்படையாக தெரியும் இடங்களில் எவ்வித விரிசல் அல்லது சேதம் இருக்கக் கூடாது. அலுமினியம் அல்லது வினைல் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை தளர்வாக இருக்கிறதா என்பதை சோதித்து இறுக்கமாக பொருத்த வேண்டும்.சுவர்களில் அடிக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள் செதில்களாக உதிர்வது அல்லது புடைத்துக் கொண்டு இருப்பது போன்றவை தென்படுகிறதா என்பதை சரிபார்க்கவும்.அதேபோல் சுவர்களில் வேறு எந்தவிதமான கறைகளும் தென்படக்கூடாது.

  கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

  கதவு மற்றும் ஜன்னல்களில் தாழ்ப்பாள் மற்றும் அவற்றை பொருத்தக்கூடிய துவாரங்களை சரி பார்க்கவும். கதவுகள் அல்லது ஜன்னல்களின் சட்டத்தை சுற்றி ஈரப்பதம் மற்றும் ஈரக்கசிவினால் ஏற்பட்ட கறைகள் காணப்படக்கூடாது.ஜன்னல் பிரேம்களைச் சுற்றியுள்ள இணைப்புகள் சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்..

  பிளம்பிங்

  குழாய் சரியாக பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.உலோக குழாய்களாக இருந்தால் அவற்றில் ஏதேனும் அரிப்பு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.அதேபோல் குழாய்களில் நீர் அழுத்தம் எதிர்பார்த்த வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  வீட்டில் உள்ள மின் அமைப்புகள்

  வீட்டில் இருக்கும் அனைத்து கேபிள்களும் சரியாக காப்பிடப்பட்டிருக்க வேண்டும்.அனைத்து லைட் மற்றும் ஃபேன்கள் வேலை செய்யும் நிலையில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சர்வீஸ் பேனல் போதுமான திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.எந்த மின் இணைப்புகளும் திறந்த நிலையில் இருக்கக்கூடாது..

  உட்புறங்கள்

  வீட்டை ஆய்வு செய்யும் பொழுது வீட்டின் உட்புறம் மிகவும் முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.வீட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வித்தியாசமான வாசனை வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.வீட்டின் தரை, சீலிங் மற்றும் சுவர்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.தேவையான இடங்களில் எலக்ட்ரிக்கல் பாயிண்டுகள் பொருத்தப்பட்டிருக்கிறதா அப்படி இல்லாத பட்சத்தில் தேவையானவற்றை பொருத்தி தரச்சொல்லி வீட்டை விற்பவரிடம் தெரிவிக்கலாம்.

  சமையலறை

  சமையல் மேடை சரியான உயரத்தில் இருக்க வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சிங்கில் நீர்க்கசிவு இல்லாமல் இருக்கவேண்டும். சமையலறை கதவுகளும் கிச்சன் கேபினட் கதவுகளும் சரியாக இயங்க வேண்டும்.

  குளியலறை

  குளியலறையில் தண்ணீர் சரியாக வருகிறதா, எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளதா, டாய்லட் ஃபிளஸ் சரியாக வேலை செய்கிறதா,குழாய்களில் எந்த ஒரு இடத்திலும் நீர்க்கசிவு ஏற்படுகிறதா, குளிக்கும் நீர் தரையில் தேங்காமல் சரியாக செல்கிறதா போன்ற அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

  மேலே கூறிய இவை மட்டுமல்லாமல் வீட்டின் டிரைனேஜ் சிஸ்டம் மற்றும் வீட்டில் செய்யப்பட்டிருக்கும் மரவேலைப்பாடுகள் ஆகிய அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்க்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் வீட்டை விற்பவரிடம் தெரிவித்து அவற்றை சரி செய்து தரச் சொல்லலாம்.

  Next Story
  ×