என் மலர்
அழகுக் குறிப்புகள்

இளம் வயதிலேயே தோல் சுருங்குவதற்கு என்ன காரணம்?
- புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு முக்கிய காரணம்.
- கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடையச்செய்கிறது.
புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடையச்செய்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்க உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.
புகைப்பிடிப்பது அல்லது மதுப்பழக்கம் உடையவர்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும். இதனால் உங்களின் இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பிடிப்பது மற்றும் மது பழக்கத்தை தவிர்த்துவிடுவது நல்லது.
தோல் சுருங்க காரணம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கொலாஜன் உற்பத்தியை குறையை செய்கிறது. எப்போழுதாவது ஒருமுறை மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினையில்லை, அதுவே அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசோல் என்ற மன அழுத்தம் ஹார்மோனின் அதிகப்படியான சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை பாதிக்க செய்கிறது. அதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
தோல் சுருங்க காரணம் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் வறண்ட சருமம் உள்ளவர்களை முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். சருமம் ஈரப்பதமாக இருப்பதால் வறண்ட சருமம் ஏற்படாமலும், தோலில் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது.
தோல் சுருங்க காரணம் நீங்கள் சரியாக தூங்காமல் இருந்ததால் பி.எச். நிலை ஈரப்பதம் இவை இரண்டு குறைந்து தோலின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதனால் சரியான நேரத்திற்கு தூங்குவது அவசியமானது.






