search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் ஸ்வெட்ஷர்ட்
    X

    இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் ஸ்வெட்ஷர்ட்

    • ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது.
    • ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது.

    சில காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்டும்,அணியப்பட்டும் மிகவும் பிரபலமடைந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.ஷார்ட்ஸ், முக்கால் பேண்ட், கார்கோ பேண்ட் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது இதுபோன்ற ஆடைகளின் வரிசையில் அனைவராலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஸ்வெட்ஷர்ட் என்பதாகும்.

    ஸ்வெட்ஷர்ட் என்றால் என்ன?

    ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது. சிலர் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற புது பாணிகளில் நமக்கு அணிவதற்கு வசதியான ஆடைகளையும், இன்னும் சிலர் உடற்பயிற்சிகளின் போது அணிவதற்கு ஏற்றார் போன்ற ஆடைகளையும் தேர்ந்தெடுத்து அணிவதைப் பார்க்க முடியும். இந்த ஃபேஷன் ஆடையானது நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.

    ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது. அதேநேரம் அந்த கம்பளியை பிரஷ் செய்து மிகவும் மென்மையாக கொடுக்கிறார்கள். இதில் இருக்கும் ஃபிளீஸ் லைனிங் போன்று கொடுக்கப்பட்டு ஒரு மென்மையான, சூடான உணர்வைத் தந்து அணிபவருக்கு கம்பளியை அணிந்தது போன்ற உணர்வைத் தருகின்றது.இவை ஸ்வெட்டர் போன்று பெரிதாக அல்லது தளர்வாக வந்தாலும் இவை ஸ்வெட்டர் அல்ல ஸ்வெட்ஷர்ட்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உண்மையில் ஸ்வெட்டர் வகைகளின் கீழ் வந்தாலும் இவை ஸ்வெட்டரிலிருந்து மாறுபட்டவை.அதேபோல் ஸ்வெட்ஷர்ட் அணிந்து வேலை செய்யலாம் ஆனால் குளிர்காலம் தவிர மற்ற காலங்களில் ஸ்வெட்டர் அணிய முடியாது.ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.கோடைக்காலத்தில் அணியக்கூடிய பல ஆடைகளில் ஸ்வெட்ஷர்ட்டும் கட்டாயம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலர் ஸ்வெட்ஷர்ட்களை ஹூடிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லா ஸ்வெட்ஷர்ட்களும் ஹூடி அமைப்புடன் வருவதில்லை.தடிமனான பருத்தித் துணியில் உட்புறம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு லைனிங் கொடுக்கப்பட்டு வருவது ஸ்வெட்ஷர்ட்டாகும்.

    அவை உங்கள் உடற்பகுதி மற்றும் கைகளை மறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது இடையூறு செய்யும் அதிகப்படியான வியர்வைக்கு விடை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×