என் மலர்

  இயற்கை அழகு

  பாக்கெட் இல்லாத உடை
  X

  பாக்கெட் இல்லாத உடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை.
  • சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

  ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் பைகள் வைத்து தைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை?

  பெண்கள் காலம்காலமாக தோள்களிலும் கைகளிலும் பைகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள் பைகள் ஒருபோதும் சட்டை பைகளுக்கு இணையாகாது. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றில் இருந்தே கண்டறிய முடியும். முந்தைய காலத்தில் ஆண்களும், பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

  கி.பி.476 முதல் 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தை பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாக பைகளை தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட சில ரக ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

  17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. 18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.

  இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு கூடிய பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. ஆனால், சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

  Next Story
  ×