என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறி
    X

    கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறி

    கேரளா ஸ்பெஷலில் செய்யும் கொண்டைக்கடலை கூட்டுக் கறி சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். இன்று இந்த கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப்,
    வாழைக்காய் - 1,
    சேனைக்கிழங்கு - 250 கிராம்,
    மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி,
    மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி,
    துருவிய தேங்காய் - அரை மூடி,
    உப்பு - தேவையான அளவு
    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 3,
    தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.

    செய்முறை :

    கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து தனியே வைக்கவும்.

    சேனைக்கிழங்கை தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

    இதனுடன் வேக வைத்துள்ள கடலையைச் சேர்க்கவும்.

    கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் நன்கு பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும்.

    இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலை தனியே அரைத்துக் கொள்ளவும்.

    பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை கூட்டுக் கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×