என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்
    X

    சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

    விருந்தினர் திடீரென வீட்டிற்கு வந்தால் விரைவில் செய்யக்கூடிய தேங்காய் பால் ஸ்வீட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் பால் - 1 கப் முதல் 2 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 2 டீஸ்பூன்
    திராட்சை பழம் - 1/2 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    சோள மாவு - 2 ஸ்பூன்

    செய்முறை :

    * பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * தேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

    * அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இரண்டாவது பாலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பிறகு அதில் சோளமாவை போட்டு கரைத்து விட்டு சர்க்கரை போடவும்.

    * ஒரு கொதி வந்து சற்று திக்கான பதம் வந்ததும் இறக்கி தேங்காய் துருவல், பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை போட்டு கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.

    * இப்போது தேங்காய் பால் ஸ்வீட் கீர் ரெடி.

    * தேவையான போது, எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×